2#10b. ஞான திருஷ்டி

அறிந்தான் தக்ஷகன் கஸ்யபன் மகிமையை!
‘முறிப்பானோ விஷத்தைத் தன் மந்திரத்தால்’?

“மன்னனைக் காப்பாற்ற மட்டுமே வந்தாய் என
மனமார நம்பிவிட முடியவில்லை என்னால்!

உண்மையைக் கூறு ஒளிக்காமல் என்னிடம்,
மன்னனைக் காப்பதால் என்ன லாபம் உனக்கு?

ஆதாயம் இல்லாமல் செட்டி ஒருவன் – பாயும்
ஆற்றோடு போக மாட்டான் அறிவேன் நான்.

சும்மா ஆடாது சோழியன் குடுமி – என்னிடம்
சொல்லு உனக்கு இதனால் என்ன ஆதாயம்?”

“மன்னனைப் பிழைக்க வைத்தால் எனக்குப்
பொன், பொருள், பரிசுகள் கிடைக்குமே!” என

‘பொருளாசை கொண்ட வெறும் மனிதன் இவன்!
அருளாசை கொண்ட பெரும் புனிதனல்ல இவன்!’

“தருவேன் அள்ளி அள்ளி இப்போதே உனக்கு
அரசன் தருவதைவிட அதிகப் பொன் பொருள்!

திரும்பிச் செல்லலாம் நீ உன் இல்லத்துக்கு!
விரும்பி அளிக்கலாம் உன் சுற்றத்தினருக்கு!”

ஆலோசித்தான் கஸ்யபன் பின் விளைவுகளை;
‘அளவில்லாத செல்வம் கிடைக்கும் உறுதியாக.

மன்னனைப் பிழைக்க வைத்தால் கிடைக்கும்
மண்ணுலகு உள்ள வரையில் பெயரும், புகழும்.

கைவிடக் கூடாது நாட்டு மன்னனின் நலனை;
கைவிடக் கூடாது நாட்டு மக்களின் நலனை.’

“தீரும் மரணமா இது அன்றித் தீரா மரணமா?”
தீர ஆராய்ந்தான் தன் ஞான திருஷ்டியில்!

ஞாலம் ஆளும் மன்னன் பிழைப்பது அரிது என
ஞான திருஷ்டியில் தெரிந்தது மிகத் தெளிவாக.

“தருவதாகச் சொன்ன தனத்தைத் தா!” என்று கேட்டுப்
பெரும் பொன் பொருளைப் பெற்றான் தக்ஷகனிடம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன் 

2#10b. Divya Dhrushti 

Takshakan realized the power of Kasypan now. He asked Kasyapan,”It is hard to believe that you had come only to save the king’s life. What do you stand to gain by saving the king’s life. I know there must be an ulterior motive for you action. Be frank and tell me the truth”

Kasyapan told Takshakan, “I am sure the king will shower rich gifts on me if I save his life.” Takshakan realized that Kasyapan was driven by his needs and greed and not by the noble thought of saving the king’s life.

“I can give you far more richer gifts than the king can. You may take them and go back home. You may share the wealth with your friends kin and kith and live happily!” Now Takshakan tempted the greedy and the needy Kasyapan openly.

Kasyapan thought for some time. ‘I must save the king for the sake of the citizens. I am sure to get rich gifts either from the king or from Takshakan. But if I save the king my name will etched in the history of mankind for eternity.’

But he also studied the future of the king Pareekshit with his divya dhrushti. He found out that there was no way in which the king’s life could really be saved.

Kasyapan was a practical man and accepted the riches given to him by Takshakan and decided to go back home – without meeting Pareekshit.